ஒரு எளவும் புரியல! நீங்களாவது சொல்லித்தொலைங்க.
சுதந்திர தினத்தன்று மதியம் சாப்பிட்டு விட்டு நிம்மதியா தூங்கலாம்னு பெட் ரூமுக்கு போனேன். மணியை பார்த்தேன் சரியா 2.55. அப்பாடா எப்படியும் இரண்டு மணி நேரம் தூங்கலாம் என்ற சந்தோஷத்தோடு கட்டிலில் படுத்தேன். தூக்கம் கண்ணை இழுத்தது. அந்த நேரம் பார்த்து மொபைல் சினுங்கியது. எடுத்துப் பார்த்தால் ஒரு மெஸேஜ் வந்திருந்தது.ஓபன் பண்ணி பார்த்தா நம்ம் "கிளீன் சிட்" பார்ட்டிதான் ( சி.பி.ஐ தான் ) அனுப்பியிருந்தது.
" to fight corruption inform CBI: SP: SU CHENNAI IN. 9444770937 / EMAIL: spsusuchn?cbi.gov.in., on demand of bribe / corrupt practice by central govt servants -jai hind. sender:BC:CBI-CHN "
எனக்கு பத்திட்டு வந்தது. ஏற்கனவே "http://www.scribd.com/doc/18019938/Sonia-Gandhi-Got-2-Billion-Dollars-From-KGB"சைட்டில சுப்பிரமனியசாமி, சோனியா காந்தி கே.ஜி.பி -யிடமிருந்து வாங்கிய இரண்டு பில்லியன் டாலருக்காக அவர் மீது வழ்க்கு தொடர வேண்டும், என ஆதாரத்துடன் சி.பி.ஐ க்கு எழுதிய கடிதத்தை படித்துவிட்டு கொலை வெறியோட இருந்தேன். அதோட இத்தாலி தொழில் அதிபர், டைட்லர், காஷ் மீர் பிரதமர் எல்லோருக்கும் கிளீன் சிட் கொடுக்க ஆரம்பிச்சதிலிருந்து , சி.பி.ஐ பத்தி நினைச்சாலே அவங்க, கழுத்தில டைப்ரைட்டரை மாட்டிக்கிட்டு, காங்கிரஸ் ஆபீஸ்ல நிக்கிற மாதிரியே தோனுது. அதாங்க ஊர்ல கழுத்தில ஆர்மோனிய பெட்டிய மாட்டிக்கிட்டு பாட்டு பாடிட்டு பிச்ச எடுப்பாங்களே ! அந்த காட்சி தான் நினைப்புக்கு வருது!.
" திமிங்கலத்தை எல்லாம் விட்டுருதீங்க. விரல் சைஸ்ல இருக்க் சின்ன மீனை பிடிக்க இப்படி தார்ப்பாய்சிட்டு வறீங்களே ! இது என்ன நியாயம்னு கேட்ட்கதோணிச்சு. போனை எடுத்தேன். " வேண்டாம் . வேண்ட்டாம். வம்பா சீரழிஞ்சு, சின்னா பின்னாமா ஆகப்போற !. பொத்திக்கிட்டு சும்மா கிட." அப்படின்னு உள் மனசு அக்கறையா அலறுச்சு. இந்தியன் தாத்தா மாதிரி வேகம் வந்துது. மறுபடியும் போனை கையில எடுத்தேன். " இந்தியன் தாத்தா நினைப்பா? இந்தியன் தாத்தா மாதிரி நினச்சு நடந்துக்கிட்ட கவுண்ட மணி கதை தெரியுமில்ல?" என மறுபடியும் அலறியது. வம்பு எதுக்கு ? பேசாம ராசி பலனை பாக்கலாம்ன்னு நியூஸ் பேப்பரை எடுத்து பார்த்தேன் . என் ராசிக்கு "வாயில சனி" அப்படின்னு போட்டிருந்தது.
பகுத்தறிவு பாசறை கலைஞரே மஞ்சள் துண்டு, குலதெய்வம் கோயில், ராகுகாலம் , எமகண்டம் இதையெல்லாம் பாக்கிறப்ப, நான் மட்டும் எம் மாத்திரம்?
இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா! மனசுக்குள்ளே சொல்லிட்டு போய் படுத்த் தூங்கிட்டேன். நீங்களே சொல்லுங்க நான் செய்தது சரியா? தப்பா?. ஒரு எளவும் புரியல .
No comments:
Post a Comment